பாரதி மணியோசை
Thursday, 23 July 2020
Thursday, 23 November 2017
தணல்..
காலத்தின் கட்டாயமாய்,
தோள் வேண்டிய.https://www.youtube.com/watch?v=8IcfuyPSwQY..
சுமக்கும்துணைத்தோள்
தேடிய சுற்றம்,..
விக்கிரமாதித்தனவைப் படிப்பதுமைகளாய்
படியேறும் கடன்தந்தோர் எண்ணிலொன்றாவது
குறைந்திட..
பானைச்சோறு தீர..
பஞ்சாய் பறந்திடும்
பூனைக்கூட்டம் போல்,..
வேதனையை பங்கிட,,
வேகமாய் விலகிட்ட
உறவுக் கூட்டம் காண,
உயர்ந்திருக்க,
ஊதிடும் உணர்வு போராட்ட உந்துதலில்..
கல்வி தந்த துணிவில்
தோளேற்றியபையோடு,
துணிவே துணையாக
தொடங்கியபயணத்தில்
கு(கொ)த்திக் கிழிக்கும்
கூரலகொத்த,
பார்வையாலேயே துகிலுரிக்கும் துச்சாதனர்கள்,...
மாதாந்திர பயணச்சலுகை அட்டையின் பொத்தல்களைப்போல..
மனதைப் பொத்தலாக்கும்...
இடியரசர்களின் உரசல்கள்...
அலுவலக கோப்புகள் நகர்வில்...
கோர்த்துக்கொள்ள..
கோர்வையாய் காரணம் தேடும் கோணல் புத்திமான்கள்...
உரக்கச் சொல்கிறோம்,
உறுதியாய் சொல்கிறோம்...
ஊதினால் அணையும்
கற்பூரமல்ல...
ஊதிட கனிந்து வளர்தீயாய் உருமாறும்
தணல் ...பெண்கள்...
மெல்லியலாள் அல்ல...
வல்லியலாள் ...
வம்பை வேரறுக்கும் வகையறிவாள்..
முகத்திரை நீங்கின்
மூச்சுக் காற்றின்
வெம்மை,உம் மூச்சடக்கிடுமே...
Subscribe to:
Comments (Atom)












